Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சியில் சரக்கு ஏற்றுமதியை பின்னுக்கு தள்ளி முக்கிய பங்காற்றியிருக்கும் சேவை துறை.!!

டெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் ஏற்றுமதிச் செயல்பாடானது சட்டைகள், தோல் பொருட்கள் மற்றும் ஆபரணங்களை ஏற்றுமதி செய்வதிலிருந்து மாறி, மென்பொருள், பொறியியல் பொருட்கள், மருந்துகள் மற்றும் மின்னணு சாதனங்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

ஒன்றிய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள், கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாகச் சேவை துறை உருவெடுத்துள்ளதை காட்டுகின்றன. கடந்த 12 ஆண்டுகளில் சரக்கு ஏற்றுமதி 42.6 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், சேவைத் துறை ஏற்றுமதி கிட்டத்தட்ட 4 மடங்கு உயர்ந்து, 166 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

அதே போல 2014-15 மற்றும் 2025-26 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இந்தியாவின் ஏற்றுமதி 468 பில்லியன் டாலரிலிருந்து 863 பில்லியன் டாலராக உயர்ந்து 84.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. எனினும் இந்த காலகட்டத்தில் பதிவான அதிகரிப்பான சுமார் 395 பில்லியன் டாலரில், 263 பில்லியன் டாலர் அளவிலான பங்களிப்பு சேவைகள் ஏற்றுமதி மூலமாகவும், மீதமுள்ள 33.4 சதவீதப் பங்களிப்பு சரக்கு ஏற்றுமதியாலும் கிடைத்துள்ளது.

கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சியில் சேவை துறை மட்டுமே சுமார் மூன்றில் இரண்டு பங்கு பங்களிப்பை அளித்துள்ளது. அதாவது 2014-15 மற்றும் 2025-26 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பதிவா 395 பில்லியன் டாலர் அளவிலான மொத்த ஏற்றுமதி வளர்ச்சியில், 263 பில்லியன் டாலர்கள் சேவைத் துறை மூலம் கிடைத்தன. மீதமுள்ள 132 பில்லியன் டாலர்கள் அதாவது சுமார் மூன்றில் ஒரு பங்கு சரக்கு ஏற்றுமதி மூலம் கிடைத்ததாக தரவுகள் கூறுகின்றன.