Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மெண்டல்அப் !

மெண்டல்அப் பிரெய்ன் கேம்ஸ் ஃபார் கிட்ஸ் (MentalUP Brain Games For Kids)... குழந்தை களின் நினைவாற்றல், கவனத் திறன், தர்க்க சிந்தனை மற்றும் பிரச்சினைகளை தீர்க்கும் திறனை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு கல்வி - விளையாட்டு சார்ந்த செயலி. தற்போது குழந்தைகள் அதிக நேரத்தை மொபைல் மற்றும் டேப்லெட்டுகளில் செலவிடும் சூழலில், வெறும் பொழுதுபோக்கைத் தாண்டி மூளை வளர்ச்சிக்கும் உதவும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியின் முக்கிய சிறப்பு, விளையாட்டு வடிவிலேயே குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் முறைதான். குழந்தைகள் விளையாடுகிறோம் என்ற உணர்வோடு பல்வேறு மூளை சார்ந்த விளையாட்டுகளை விளையாடலாம். இதனால் மனப்பாடத் திறன், விஷுவல் அறிவு, கணித சிந்தனை, மற்றும் கவனிப்பு போன்ற திறன்கள் வளரும். அதனால் குழந்தைகளுக்கு படிப்பு என்ற அழுத்தம் இல்லாமல் கற்றல் அனுபவம் இந்த செயலி மூலம் கிடைக்கிறது.

இந்தச் செயலியில் வயதுக்கு ஏற்ப தனித்தனி பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சிறிய குழந்தைகளுக்கு நிறங்கள், வடிவங்கள், பொருத்துதல் போன்ற அடிப்படை திறன்கள் கற்பிக்கப்படுவதுடன், வயது அதிகரிக்கும் போது புதிர்கள், பேட்டர்ன்கள் கண்டுபிடிப்பு, விரைந்து சிந்திக்கும் திறன் போன்ற சவாலான செயல்பாடுகளும் வழங்கப்படுகின்றன. இதனால் குழந்தையின் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப மூளை செயல்பாடுகள் தூண்டப்படுகின்றன.

இன்றைய காலத்தில் குழந்தைகளின் கவனச்சிதறல் அதிகரித்து வருவது பெற்றோர்களின் பெரிய கவலையாக உள்ளது. அதற்கு இந்த செயலி உதவும். மேலும் பயனற்ற மொபைல் நேரத்திற்கு இந்தச் செயலி ஒரு ஆறுதல். விடுமுறை நாட்களில் குழந்தைகளுக்கு அழுத்தம் இல்லாமல் அவர்களின் முளைக்கு உதவும் இந்த செயலியை கொடுக்கலாம்.