Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆடவர் ஜூனியர் உலக ஹாக்கி சிலி அட்டகாச வெற்றி

சென்னை: ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் சென்னையில் நேற்று நடந்தன. 17 மற்றும் 18ம் இடங்களுக்காக நடந்த போட்டியில் சுவிட்சர்லாந்து-சிலி அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் சிறப்பாக ஆடிய சிலி, 2-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது. பின்னர், 13 மற்றும் 14வது இடங்களுக்காக நடந்த போட்டியில், மலேசியா-ஜப்பான் அணிகள் களம் கண்டன.

சமபலத்துடன் நடந்த இப்போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டதால் ஷூட்அவுட் நடத்தப்பட்டு, அதில், 3-0 என்ற கோல் கணக்கில் மலேசியா வென்றது. அதைத் தொடர்ந்து, 11 மற்றும் 12வது இடங்களுக்காக நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா-தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. இப்போட்டியில் ஆக்ரோஷமாக ஆடிய ஆஸ்திரேலியா, 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடி, 11ம் இடத்தை பிடித்தது.