Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து நடைபயணம் சென்ற 120 பேர் கைது

ஓசூர்: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் செயல்பாடுகளை கண்டித்தும், கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் வனப்பகுதியில் மூன்று அப்பாவி தமிழர்களை சுட்டுக்கொன்ற வனத்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யவும், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில், ஓசூர் பேருந்து நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து, மேகதாது நோக்கி நடைபயணம் சென்றபோது, கன்னட சலுவாலியா தலைவர் வாட்டாள் நாகராஜ் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அப்போது, அவர்களை தடுத்து நிறுத்தி 13 பெண்கள் உள்பட 120 பேரை கைது போலீசார் செய்தனர். பின்னர், தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டு, மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.