மேகதாது அணை வழக்கு: கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் 3 வாரங்கள் அவகாசம்!
மேகதாது அணைக்கு எதிரான வழக்கில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் 3 வாரங்கள் அவகாசம் வழங்கியுள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த அவகாசத்தை வழங்கியது.



