Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

அமைச்சர் பொன்முடி தலைமையில் கூட்டம் 24 கருத்துருக்கள் தேசிய வன உயிரின வாரியத்தின் நிலைக்குழுவிற்கு அனுப்பி வைப்பு: தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் முதலாவது மாநில வன உயிரின வாரியத்தின் நிலைக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 24 கருத்துருக்கள் தேசிய வன உயிரின வாரியத்தின் நிலைக் குழுவிற்கு அனுப்பி வைக்கும் பொருட்டு விவாதங்களுக்காகவும், பரிந்துரைக்காகவும் வைக்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் முதலாவது மாநில வன உயிரின வாரியத்தின் நிலைக்குழு கூட்டம் நடைபெற்றுது. இக்கூட்டத்தில் அமைச்சர் முன்னிலையில் மாநில வனவிலங்கு வாரியத்தின் முக்கிய செயல்பாடுகள், பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட வேண்டிய பகுதிகளை தேர்வு செய்தல் மற்றும் நிர்வகித்தல், வனஉயிரினம் மற்றும் தாவரங்களின் பாதுகாப்பு மற்றும் அதன் பாதுகாப்பிற்கான கொள்கைகளை உருவாக்குதல், வனஉயிரின (பாதுகாப்பு) சட்டத்தில் எந்த ஒரு அட்டவணையிலும் திருத்தம் செய்தல்.

மேலும் வாரியத்தின் கொள்கையானது வனஉயிரினங்களின் பாதுகாப்புடன் பழங்குடியினர் மற்றும் பிற வனக் குடியிருப்பாளர்களின் தேவைகளை ஒத்திசைவு செய்யத் தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக மற்றும் வனஉயிரினங்களின் பாதுகாப்பு தொடர்புடைய எந்தவொரு விஷயத்தையும் மாநில அரசுக்கு தெரிவித்தல். மேலும் 24 கருத்துருக்கள் தேசிய வன உயிரின வாரியத்தின் நிலைக்குழுவிற்கு அனுப்பி வைக்கும் பொருட்டு நேற்று நடைபெற்ற முதலாவது மாநில வன உயிரின வாரியத்தின் நிலைக்குழு கூட்டத்தில் விவாதங்களுக்காகவும், பரிந்துரைக்காகவும் வைக்கப்பட்டது. கூட்டத்தில் சங்கராபுரம் எம்எல்ஏ உதயசூரியன், வனத்துறை செயலாளர் செந்தில்குமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வனத்துறை தலைவர் னிவாஸ் ரா.ரெட்டி, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்ரா உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.