Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பிரதமர் மோடியுடன் நிதிஷ்குமார் சந்திப்பு

புதுடெல்லி: பீகார் மாநிலம், பாட்னாவின் பாங்கிபூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பாஜ தோல்வியை தழுவியது. இந்நிலையில் இதற்கு அடுத்த நாள் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான நிதிஷ்குமார் பிரதமர் மோடியை சந்தித்தார்.

பிரதமருடனான இந்த சந்திப்பின்போது ஒன்றிய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் மற்றும் மாநிலங்களவை எம்பி சஞ்சய் குமார் ஆகியோர் உடன் இருந்தனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமரின் அலுவலக அறையில் இந்த சந்திப்பு நடந்தது. கடந்த ஏப்ரல் மாதம் முதல்வராக இருந்த நிதிஷ்குமார் பதவி விலகியதை அடுத்து பாஜவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி முதல்வராகப் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.