Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மீனாட்சி அம்மன் கோயில் முன் சிகரெட் பிடித்த காவலருக்கு அபராதம் விதிக்கப்பட்டதா? மதுரை போலீஸ் கமிஷனர் ஆஜராகி விளக்கம் அளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை மீனாட்சி கோயில் அருகே உள்ள காவல் சோதனைச்சாவடியில் கடந்த அக். 16ம் தேதி காலை பணியில் இருந்த எஸ்ஐ ஒருவர் சீருடையில் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தார். அவரிடம் இது மிக புனிதமான இடம், இந்த இடத்தில் புகை பிடிப்பது சட்டப்படி தவறு என கூறினேன். ஆனாலும் அவர் தொடர்ந்து புகைபிடித்தார்.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே புகைபிடித்த காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர், ‘‘காவல்துறையினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை ஏற்க முடியாது,

எதிர்காலங்களில் காவலர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபடக் கூடாது என ஏதேனும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதா? சம்பந்தப்பட்ட காவலரிடம் அபராதம் வசூலிக்கப் பட்டுள்ளதா’’ என்றனர். பின்னர், மதுரை மாநகர் காவல்துறை ஆணையாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை வரும் 12ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.