Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்

பணி விவரம்:

1. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: 12 இடங்கள்.

வயது: 28க்குள். சம்பளம்: ரூ.67,530.

தகுதி: லைப் சயின்ஸ்/பயாலஜிக்கல் சயின்ஸ்/விலங்கியல்/பயோ கெமிஸ்ட்டிரி/ பயோ-டெக்னலாஜி/ பயோ மெடிக்கல் சயின்ஸ்/ மெடிக்கல் லேப் டெக்னாலஜி/ கெமிஸ்டிரி/ ஹெல்த்கேர்/ புராஜக்ட் மேனேஜ்மென்ட்/நூலகம் மற்றும் தகவல் அறிவியல்/ என்டோகிரினோலாஜி/மால்குலர் மற்றும் ஸ்டெரக்சுரல் பயாலஜி/ நியூரோ சயின்ஸ் மற்றும் ஏஜென்சிங் பயாலஜி/மெக்கானிக்கல்/ எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. டெக்னீசியன்-1. மொத்த காலியிடங்கள்: 32.

வயது: 28க்குள்.

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கெமிக்கல் பிளான்ட்/ ரெப்ரிஜிரேஷன் மற்றும் ஏர்கண்டிஷனிங்/ எலக்ட்ரீசியன்/எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன்/ மெக்கானிக் கம் ஆபரேட்டர்/ பிளம்பர்/பிட்டர்/ சிவில் இன்ஜினியரிங்/ கார்பென்டர்/ மெடிக்கல் லேப் டெக்னீசியன்/ செராமிக் டெக்னாலஜி/ இன்டஸ்டிரியல் சேப்டி மேனேஜ்மென்ட்/ பயர்மேன்/கம்ப்யூட்டர்/மெக்கானிக்/டிஜிட்டர் போட்டோகிராபி ஆகிய ஏதாவதொரு டிரேடில் 55% மதிப்பெண்களுடன் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

கட்டணம்: ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினர்/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.

https://cdri.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.12.2025.