சென்னை: மருத்துவ படிப்பில் வசிப்பிட ஒதுக்கீடு செல்லாதா? உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சட்டத் திருத்தம் தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் மாநில அடிப்படையில் ஒதுக்கீடு கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தமிழ்நாடு போன்ற வலுவான மருத்துவக் கல்வி கட்டமைப்பு கொண்ட மாநிலங்கள் பாதிக்கும் மருத்துவ இடங்களை பிற மாநில மாணவர்களுக்கு தாரை வார்க்க தீர்ப்பு வழி செய்யும்; இது மாநில உரிமைக்கு எதிரானது என தெரிவித்தார்.