Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விமானப்படையில் மெடிக்கல் அசிஸ்டென்ட்

பிளஸ் 2/ டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு

பணி: மெடிக்கல் அசிஸ்டென்ட் (ஏர்மேன் இன்டேக்-02/2027, குருப் ‘ஒய்’ (நான்-டெக்னிக்கல்).

சம்பளம்: ரூ.26,900. வயது: பிளஸ் 2 மட்டும் படித்தவர்கள் 21 வயதிற்குள்ளும், டி.பார்ம், பி.பார்ம் உள்ளிட்ட கூடுதல் தகுதி பெற்றவர்கள் 24 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

தகுதி: கணித பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று டி.பார்ம் அல்லது பி.பார்ம் படித்திருக்க வேண்டும்.

உடற்தகுதி: குறைந்தபட்சம் 152 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் 77 செ.மீ., அகலம் இருக்க வேண்டும். 5 செ.மீ., விரிவடையும் தன்மையுடன் இருக்க வேண்டும்.

இந்திய விமானப்படையால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவத்தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் உடற்திறன் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவர். உடற்திறன் தேர்வில் 1.6 கி.மீ., தூரத்தை 7 நிமிடங்களில் ஓடி முடித்தல் மற்றும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் புஷ்அப், சிட்அப் மற்றும் ஸ்குவாட் பயிற்சிகளை செய்தல் ஆகிய போட்டிகளும் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். ஆன்லைனில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.14,600 உதவித் தொகையுடன் ஒரு வருட பயிற்சி வழங்கப்படும்.

செப்.22,23 ஆகிய தேதிகளில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.

கட்டணம்: ரூ.550/-இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

www.iafrecruitment.edcil.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.07.2026.