எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
Advertisement
விண்ணப்பப் பதிவுக்கு நாளை கடைசி நாள் (ஜூன் 25) என்பதால், அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான அவகாசம் வழங்குவதற்கான வாய்ப்பும் குறைவு என கூறப்படுகிறது. இதனால், விண்ணப்பதாரர்கள் மத்தியில் திருத்தங்களுக்கான அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் தகுதியுள்ள மாணவர்கள், கடைசி நேர பரபரப்பைத் தவிர்த்து, விரைந்து விண்ணப்பப் பதிவை நிறைவு செய்யுமாறு மருத்துவ மாணவர் சேர்க்கை குழு அறிவுறுத்தி உள்ளது.
Advertisement