மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சரிவர சிகிச்சை தராததால் குழந்தை இறந்ததாக கூறப்படும் விவகாரத்தில் மருத்துவர் சஸ்பெண்ட்
06:37 PM Nov 11, 2024 IST
Share
Advertisement
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது மூச்சு விட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்ததையடுத்து கர்ப்பிணிப் பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பிரசவம் பார்த்த மகப்பேறு மருத்துவர் ரம்யாவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார் .