தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேட்ரிமோனி மூலம் அறிமுகமாகி 2வது திருமணம் செய்வதாக கூறி பெண்ணிடம் 46 பவுன் சுருட்டல்

விழுப்புரம்: விழுப்புரத்தில் மேட்ரிமோனி மூலம் அறிமுகமாகி 2வது திருமணம் செய்த கொள்வதாக கூறி பெண்ணிடம் 46 பவுன் நகை சுருட்டி சென்ற வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

விழுப்புரம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ராஜா அகமது மகள் ஷகிலாபானு (33). ஏற்கனவே திருமணம் ஆகி 2 மகன்கள் உள்ளனர். கணவரால் கைவிடப்பட்ட நிலையில் தற்போது தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் தமிழ் மேட்ரிமோனி மூலம் 2வது திருமணத்துக்காக வரன் தேடி வந்தார்.

அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்த ரகமதுல்லா (35) என்பவர் கடந்த ஏப்ரல் 25ம் தேதி முதல் ஷகிலா பானுவுடன் அறிமுகமாகி பழகி வந்துள்ளார். மேலும் ஷகிலா பானுவை திருமணம் செய்து கொள்வதாக கூறி பழகிய ரகமதுல்லா, பல்வேறு காரணங்களை கூறி அவரிடமிருந்து சிறுக, சிறுக 46 பவுன் நகையை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் ரகமதுல்லா கடந்த சில நாட்களாக ஷகிலா பானுவிடம் பேசுவதையும், சந்திப்பதையும் தவிர்த்து வந்துள்ளார். நேற்று ஷகிலாபானு போன் செய்தபோது சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. விசாரித்ததில் அவர் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது. பின்னர்தான் நகைக்காக தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பழகி ஏமாற்றியுள்ளதும் தெரிய வந்தது. இதனால் அதிருப்தியடைந்த ஷகிலாபானு, விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement