Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மற்றொரு போட்டியில் வெ.இண்டீஸ் வின்

கொல்கத்தா: கொல்கத்தாவில் நேற்று மதியம் நடந்த லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து அணிகள் மோதின. முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹெட்மயர் 64 ரன்கள் விளாசினார்.

அடுத்து விளையாடிய ஸ்காட்லாந்து அணி 18.5 ஓவரில் 147 ரன்னுக்கு ஆல்அவுட் ஆக வெஸ்ட் இண்டீஸ் 35 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் கேப்டன் பெரிங்டன் அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஷெப்பர்டு 5 விக்கெட், ஹோல்டர் 3 விக்கெட் எடுத்தனர். ஆட்டநாயகன் விருது ஹெட்மயருக்கு வழங்கப்பட்டது.

* 2 முறை 3 விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஷெப்பர்ட்

டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2 முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் இணைந்தார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷெப்பர்ட். கொல்கத்தாவில் நேற்று நடந்த 2வது ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியும், ஸ்காட்லாந்து அணியும் மோதின. முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 182 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய ஸ்காட்லாந்து அணி 147 ரன்களில் ஆல் அவுட்டானது.

இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரொமாரியோ ஷெப்பர்ட் ஹாட்ரிக் விக்கெட்டுகளுடன் 5 விக்கெட்கள் கைப்பற்றி சாதனை படைத்தார். இதன்மூலம் டி 20 போட்டியில் இரண்டுமுறை ஹாட்ரிக் விக்கெட்கள் வீழ்த்திய இலங்கையில் மலிங்கா, நியூசிலாந்தின் டிம் சவுதி, ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்சுடன் ஷெப்பர்டும் இணைந்தார்.