Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மாருதி இ விட்டாரா

மாருதி நிறுவனம், இ விட்டாரா காரை அறிமுகம் செய்துள்ளது. இது 49 கிலோவாட் அவர் பேட்டரி மற்றும் 61 கிலோவாட் அவர் பேட்டரி என இரண்டு வித பேட்டரி தேர்வுகளில் கிடைக்கும். 3 டிரிம்கள் உள்ளன. 49 கிலோவாட் அவர் வேரியண்ட் அதிகபட்சமாக 144 எச்பி பவரை வெளிப்படுத்தும். முழுமையாக சார்ஜ் செய்தால் 440 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் என அராய் சான்றளித்துள்ளது. 61 கிலோவாட் வேரியண்ட் 174 எச்பி பவரை வெளிப்படுத்தும். இது 543 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் என அராய் சான்றளித்துள்ளது. லெவல் டூ அடாஸ், 360 டிகிரி கேமரா, வெண்டிலேட் சீட்கள், 10 விதமாக மாற்றி அமைத்துக்கொள்ளும் வகையில் டிரைவர் சீட்கள் இடம் பெற்றுள்ளன. பேட்டரியுடன் அல்லது வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளலாம். டெல்டா, ஜெட்டா, அல்பா, அல்பா டூயல் டோன் என 4 வேரியண்ட்கள் உள்ளன. துவக்க வேரியண்டான டெல்டா ஷோரூம் விலை சுமார் ரூ.15.99 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேட்டரி வாடகை திட்டத்தின்படி ஷோரூம் விலை ரூ.10.99 லட்சம் மற்றும் கிலோ மீட்டருக்கு ரூ.3.99 செலுத்த வேண்டும். இதுபோல் ஜெட்டா வேரியண்ட் ஷோரூம் விலை சுமார் ரூ.17.49 லட்சம். வாடகை திட்டத்துடன் ரூ.11.99 லட்சம் மற்றும் கிலோ மீட்டருக்கு ரூ.4.39. அல்பா வேரியண்ட் சுமார் ரூ.19.79 லட்சம். வாடகை திட்டத்தில் ரூ.14.29 லட்சம் மற்றும் கிலோ மீட்டருக்கு ரூ.4.39. அல்பா டூயல்டோன் சுமார் ரூ.20.01 லட்சம் மற்றும் வாடகை திட்டத்தில் ரூ.14.51 லட்சம் மற்றும் கிலோ மீட்டருக்கு ரூ.4.39 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த காரை முன்பதிவு செய்வோருக்கு ஜூலை மாதம் டெலிவரி கிடைக்கும் என நிறுவன வட்டாரங்கள் கூறுகின்றன.