Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மார்த்தாண்டம் அருகே 16 வயது சிறுவனை மிரட்டிய தாயின் காதலன் மீது வழக்கு

மார்த்தாண்டம்: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு செக்காரவிளை வீடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி சுனிதா. இந்நிலையில், சுனிதாவுக்கும் கழுவதிட்டை கோணம் பகுதியை சேர்ந்த லெனின் என்பவருக்கும் தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதையறிந்த அவரது 16 வயது மகன் அதிர்ச்சியடைந்தான். உடனே லெனினிடம் சென்று, ‘ஏன் இப்படி செய்கிறீர்கள்’ என்று கேட்டுள்ளான்.

இதனால் ஆத்திரமடைந்த லெனின், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சிறுவனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இனியும் என்னிடம் இப்படி நடந்து கொண்டால் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று கூறி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் மன வேதனையடைந்த சிறுவன், நேற்று மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து லெனினிடம் விசாரித்து வருகின்றனர்.