Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அதிகாரிகளின் ஒப்புதலை பெற்ற பின்னரே பாகிஸ்தான் பெண்ணை மணந்தேன்: டிஸ்மிஸ் செய்யப்பட்ட சிஆர்பிஎப் வீரர் பேட்டி

ஜம்மு: ஜம்முவை சேர்ந்த முனீர் அகமது ஒன்றிய ரிசர்வ் போலீஸ்(சிஆர்பிஎப்)படையில் பணிபுரிந்து வந்தார். இவர் பாகிஸ்தானை சேர்ந்த மினல் கான் என்ற பெண்ணை கடந்த ஆண்டு வீடியோ அழைப்பில் திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகு மினல்கான் இந்தியாவிற்கு வந்தார். பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும் வெளியேற அரசு உத்தரவிட்டது. அப்போது தான் சிஆர்பிஎப் வீரர் முனீர் அகமது பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், முனீர் அகமது நேற்று கூறுகையில்,‘‘பாகிஸ்தானில் உள்ள எனது உறவுக்காரபெண்ணை திருமணம் செய்வதற்கான அனுமதியை சிஆர்பிஎப் தலைமையகத்திடம் கேட்டுப் பெற்றேன். அப்போது என்னிடம் இதற்கு எந்தவித தடையில்லா சான்றிதழும் தேவையில்லை என அதிகாரிகள் கூறினர். இதற்காக எனது தரப்பில் அனைத்து விதமான ஆவணங்களையும் சமர்ப்பித்தேன். எனது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், திருமண சான்று உள்ளிட்டவற்றையும் நான் சமர்ப்பித்துள்ளேன். சட்டத்தின் மூலம் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.