திருமணத்திற்குப் பிறகு பெண்கள் தங்களுடைய கனவை அவ்வளவு சுலபமாக நிறைவேற்றிக்கொள்ள முடியாது என்பது சமீப காலத்தில் பொய்யாகி வருகிறது. பல துறைகளை பெண்கள் திருமணத்திற்குப் பிறகு தான் இன்னும் பக்குவ நிலையுடன் முதிர்ச்சியாக கையாள்கிறார்கள். சினிமா மட்டும்தான் இதற்கு விதிவிலக்காக இருந்து வந்தது. ஆனால் கடந்த ஐந்து வருடங்களாக இதிலும் மாற்றங்கள் நிகழத் துவங்கியிருக்கின்றன. தற்போது இந்திய அளவில் மிகப் பெரிய பட்ஜெட் படங்கள், பான் இந்தியா மார்க்கெட் என அனைத்திலும் கொடி கட்டி பறக்கிறார்கள் திருமணமான சீனியர் நடிகைகள். இவர்களில் பலருக்கும் திருமணம் ஆகி குழந்தை இருப்பதுடன் மேலும் 40 வயதை கடந்தவர்களாகவும் இருக்கிறார்கள். எத்தனை வயதானாலும் நடிப்புத் துறை ஆண்களுக்கு மட்டுமே சாத்தியமாக இருந்த நிலையில் தற்போது மிகப்பெரும் அளவில் மாற்றங்கள் பெண்களுக்கும் உருவாக துவங்கியிருக்கிறது. அப்படி திருமணம் மற்றும் குழந்தைக்கு பிறகும் தனக்கான இடத்தை இன்னும் வலிமையாக மாற்றிக்கொண்ட நடிகைகள் இவர்கள்தான்.
நயன்தாரா
திருமணம்: விக்னேஷ் சிவனுடன் (2022)
திருமணத்திற்குப் பிறகு:
ஜவான் (2023) ஷாருக் கானுடன் மாஸ் ஹிட்டாகியது, அன்னபூரணி (2023), டெஸ்ட்( 2024), ஒரு லிட்டர் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இவரின் திருமணத்திற்கு பிறகு தான் வெளியாகின. மேலும் மூக்குத்தி அம்மன் 2, டாக்ஸிக்: ஏ ஃபெய்ரி டேல் ஃபார் குரோன் - அப்ஸ், மண்ணாங்கட்டி since 1960 உள்ளிட்ட படங்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
காஜோல்
திருமணம்: அஜய் தேவ்கனுடன் (1999)
திருமணத்திற்கு பிறகு : ஃபனா ( 2006)
(2006), மை நேம் இஸ் கான் (2010) துவங்கி தில்வாலே(2015), லஸ்ட் ஸ்டோரிஸ் ( 2023), உடன் தற்போது ஹவ் ஓல்ட் ஆர் யூ இந்தி ரீமேக் உட்பட 5க்கும் மேலான படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ்க்குக் காத்திருக்கின்றன. OTT-யிலும் த ட்ரையல் (2023) சீரிஸ் நடித்தார்.
ஐஸ்வர்யா ராய்
திருமணம்: அபிஷேக் பச்சன் (2007)
திருமணத்திற்கு பிறகு:
எந்திரன் (2010), ஹாலிவுட்டில் த பிங்க் பாந்தர்(2009), ராவணன் ( 2010), ஹேய் தில் ஹாய் முஸ்கில் (2016) , பொன்னியின் செல்வன் I & II (2022,23), எப்போதும் அவருக்கான இடம் காத்திருப்பில் இருக்க பல இயக்குனர்கள் அவரது கதவை தட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சில குடும்பச் சிக்கல்கள் காரணமாக புதுப்படங்கள் எதையும் ஏற்றுக் கொள்ளாமல் மௌனம் காத்து வருகிறார்.
வித்யா பாலன்
திருமணம்: சித்தார்த்த ராய் கபூர் (2012)
திருமணத்திற்கு பிறகு :
கஹானி (2012), துமாரி சுலு (2017), ஷெர்னி (2021), ஜல்சா (2022), நியாட் (2023) , சென்ற வருடம் வெளியான பூல் புலாயா 3(2024). சுஜாய் கோஷ் இயக்கத்தில் அமிதாப் பச்சனுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
கரீனா கபூர்
திருமணம்: சைஃப் அலி கான் (2012)
திருமணம் பிறகு:
தபாங், சிங்கம் ரிட்டர்ன்ஸ், பஜ்ரங்கி பைஜான், உள்ளிட்ட கான்களின் படங்கள் , விரே தி வெட்டிங் , குட் நியூஸ், ஜானே ஜான், லால் சிங் சத்தா, க்ரு, சிங்கம் அகெய்ன், என இப்போதும் டாப். தக்த், தாய்ரா உட்பட ஐந்துக்கும் மேலான படங்கள், சீரிஸ் என பிசி.
சமந்தா
திருமணம்: நாக சைதன்யா (2017), விவாகரத்து (2021)
திருமணத்திற்கு பிறகு:
சூப்பர் டீலக்ஸ், காத்து வாக்குல ரெண்டு காதல், தி ஃபேமிலி மேன், யசோதா, சாகுந்தலம், குஷி, சிட்டாடல், என சர்வதேச நடிகையாகவும் மாறி இருக்கிறார். ராக்த் பிரமண்ட், மா இன்டி பங்காரம், உள்ளிட்ட ப்ராஜக்ட்டுகளிலும் நடித்து வருகிறார்.
ஜோதிகா (Jyotika)
திருமணம்: சூர்யா (2006)
திருமணத்திற்கு பிறகு:
36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், என தனது இரண்டாம் இன்னிங்ஸை துவங்கிய ஜோதிகா காதல் த கோர், ஷைத்தான், ஸ்ரீகாந்த், டப்பா கார்ட்டல் , என தனித்துவமான படங்களில் நடித்த வருகிறார். சைத்தான் 2, த அனிமேட்டர், அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் ஒரு படம் என ஜோதிகா தொடர் பிசி.
மஞ்சு வாரியர்
திருமணம்: திலீப் (1998), விவாகரத்து (2015)
திருமணம் மற்றும் விவாகரத்திற்கு பிறகு: ஹவ் ஓல்ட் ஆர் யூ(2014), லூசிபர், அசுரன், துணிவு, சதுர் முகம், வேட்டையன், எல் டு எம்புரான் என மாஸ் காட்டி வருகிறார். Mr. எக்ஸ், எல் 3, 9 எம்எம் என அடுத்தடுத்த படங்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
மீனா
திருமணம்: வித்யசாகர் (2009), அவர் மரணம் (2022)
திருமணத்திற்குப் பிறகு:
த்ருஷியம் சீரிஸ், ப்ரோ டாடி, அண்ணாத்த, முந்திரிவல்லிகள் தளிர்க்கும் போல், அனந்தபுரம் டைரிஸ், எனத் தொடர்ந்து நடித்து வருகிறார். அடுத்தடுத்து ரவுடி பேபிஸ், த்ருஷ்யம் 3 உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.
காஜல் அகர்வால்
திருமணம்: கௌதம் கிச்லு (2020)
திருமணத்திற்கு பிறகு:
ஹேய் சினாமிகா, மொசாகள்ளு, கோஸ்டி, சத்தியபாமா, இந்தியன் 2, பகவந்த் கேசரி உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து தனது திறமையை காட்டி வருகிறார். இந்த வருடமும் இந்தியன் 3, தி இந்திய ஸ்டோரி, கண்ணப்பா உள்ளிட்ட படங்களும் காஜல் அகர்வாலுக்கு வெளியாக காத்திருக்கின்றன.
ஸ்ரேயா சரண்
திருமணம்: கோல்வோ (2018)
பிறகு பெரிய படங்கள்:
த்ருஷ்யம் சீரிஸ் (இந்தி), தடக்கா, மியூசிக் ஸ்கூல், பவித்ரா (2022), சத்யம், கப்சா உள்ளிட்ட படங்கள் திருமணத்திற்கு பிறகு தான் ஸ்ரேயா சரணுக்கு வெளியானது. ரெட்ரோ படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
லிஜ்ஜோ மொல்
திருமணம்: அருண் ஆண்டனி(2021)
திருமணத்திற்கு பிறகு:
சிவப்பு பச்சை மஞ்சள், கர்ணன், ஜெய் பீம், இவருடைய படங்களின் தேர்வும் நேர்த்தியாக அமைந்தன. சமீபத்திலும் கூட காதல் என்பது பொதுவுடமை, ஜென்டில் உமன், பொன்மான், உள்ளிட்ட படங்களும் இவருக்கு பாராட்டுகளை அள்ளிக் கொடுத்தன. சம்ஷயம், பேபி கேர்ள், ஃப்ரீடம், பிளைன்ட் ஃபோல்ட், உட்பட ஏழுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஆலியா பட்
திருமணம்: ரன்பீர் கபூர் (2022)
திருமணத்திற்கு பிறகு:
கங்குபாய் கத்தியவாடி (2022) பெரும் வரவேற்பு பெற்று தேசிய விருதுவரை பெற்றுக் கொடுத்தது.
ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி, பிரம்மாஸ்திரா (2022) , ஹார்ட் ஆஃப் ஸ்டோன் (2023) , ஜிக்ரா ( 2024 ) என குடும்பம் குழந்தை ஒரு பக்கம் கரியர் ஒரு பக்கம் என மாஸ் காட்டி வருகிறார்.
லவ் &வார், ஆல்ஃபா, தி ஹன்டர்ஸ் உட்பட எட்டுக்கும் மேலான ப்ராஜெக்டுகளில் அலியா பட் செம பிஸி.
சோனம் கபூர்
திருமணம்: ஆனந்த் ஆஹுஜா (2018)
பிறகு பெரிய படங்கள்:
சோயா ஃபேக்டர் (2019), ஏக் லடுக்கி கோ தேக்கா தோ (2019)
வீரே தீ வெட்டி (2018) , ஏகே vs ஏகே (2020) , பிளைன்ட் ( 2023)
குழந்தை காரணமாக ஓரிரு வருடங்கள் பிரேக் எடுத்த சோனம் கபூர் பேட்டில் ஃபார் பிட்டோரா படம் மூலம் கம் பேக் கொடுக்க இருக்கிறார்.
அமலா பால்
திருமணம்: விஜய் (2014), விவாகரத்து (2017), ஜகத் தேசாய் (2023)
திருமணத்திற்கு பிறகு:
ஆடை ( 2019) , ராட்சசன் (2018), பசங்க 2, திருட்டுப் பயலே 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல், கடாவர், கிறிஸ்டோபர், பிட்ட காதலு, தி லெவல் கிராஸ், த கோட் லைஃப், என அவருடைய கரியர் கிராஃப் உச்சம் சென்று கொண்டிருக்கிறது. குழந்தை பெற காரணமாக பிரேக் எடுத்துக் கொண்ட அமலா தற்போது திவிஜா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தீபிகா படுகோனே
திருமணம்: ரன்வீர் சிங் ( 2018)
திருமணத்திற்கு பிறகு: ஜீரோ, 83, பதான், ஜவான், பைட்டர், கல்கி 2898 AD, சிங்கம் அகைன் என இந்தியாவின் மெகா ஹிட் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். லவ் & வார், த இன்டர்ன் திரைப் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இன்னும் இதில் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழ வேண்டும் . நடிப்பு என்பது கலை, கலைக்கு வயதும் பாலினமும் தேவையில்லை. இதற்கு முதலில் சமூகப் பார்வையும் மாற வேண்டும். ஒரு திருமணமான நடிகை அல்லது சீனியர் நடிகை சற்று கவர்ச்சியாக உடை அணிந்தாலே இதெல்லாம் உனக்குத் தேவையா, உங்கள் வயதிற்கு ஏற்ற உடைகள் அணியுங்கள் என இணையதளங்களில் கலாய்க்கும் மனநிலை மாற வேண்டும். இந்த நிலை மாறும்பொழுது இன்னும் பெண்களுக்கான இடம் பெரிதாகும். வயது மற்றும் பாலினம் தாண்டி திறமை பேசப்படும்.
- ஷாலினி நியூட்டன்
