மங்கு நீக்கும் மஞ்சள்!
தீரா பிரச்னைகளில் பெரிய பிரச்சனை முகப்பருக்கள். அந்த பருக்களினால் ஏற்படும் தழும்புகள், கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்கள் மறைய நம் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி சரும அழகை மெருகேற்றலாம். முகத்தின் அழகை கெடுக்கும் வகையில் வரும் மருக்களை உதிர செய்ய சில இயற்கை முறைகள் உள்ளன. இயற்கை எப்போதும் நமது சருமத்திற்கு பாதுகாப்பை வழங்கும். அதுவும் வீட்டில் நாம் பயன்படுத்தும் பொருட்களை கொண்டு இயற்கை முறையில் செய்யும் போது செலவுகளும் குறையும். இன்றைய பதிவில் எளிமையான முறையில் முகத்தில் மருக்களை நீக்கி பளிச் என்ற சருமத்தை பெற சில இயற்கை வழி
முறைகள் தெரிந்துகொள்வோம்.
முகம் எப்போதும் புது பொலிவுடன் இருக்க: மஞ்சள் முகத்தில் படியும் மாசுகளை எதிர்த்து போராடக் கூடியது. பால் சருமத்திற்கு ஆரோக்கியத்தை தரும்.மைதா மாவு / கடலை மாவு 2 ஸ்பூன், மஞ்சள் தூள் 1 ஸ்பூன், பால் தேவையான அளவு.முதலில் ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் மைதா மாவு எடுத்து கொள்ளவும். அதனுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு அதில் சிறிதளவு பால் சேர்த்து பேஸ்ட் போல் தயாரித்துக் கொள்ளவும். இந்த பேஸ் பேக்கை முகத்தில் தடவுவதற்கு முன்பு முகத்தை குளிர்ந்த நீர் கொண்டு நன்றாக சுத்தம் செய்து விட்டு பிறகு இந்த பேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்து, 20 நிமிடங்கள் வரை நன்றாக உலர்ந்த பின்னர் வெதுவெதுப்பான நீரினால் முகத்தினை நன்றாக சுத்தம் செய்துகொள்ளவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் நீங்கி சருமம் எப்போதும் புது பொலிவுடன் இருக்கும்.
- B. கவிதா.