Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மணிப்பூர் துப்பாக்கிச் சூடு: 2 கிராம மக்கள் பலி

இம்பால்: மணிப்பூரின் கங்போக்பி மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு கிராம மக்கள் உயிரிழந்தனர். டி. வாய்சாங் துணைக்கோட்டத்திற்கு உட்பட்ட குக்கி மக்கள் வசிக்கும் என். தேகாங் கிராமத்தில் காலை 9.30 மணியளவில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. நவீன ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் பல வீடுகளை தீக்கிரையாக்கியதோடு, சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் லாம்தின்தாங் (35), நெய்சின் ஆகியோர் உயிரிழந்தனர். முதியவர் ஒருவர் காயமடைந்தார். இந்த தாக்குதலால் கிராம மக்கள் வனப்பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இரு தரப்பு ஆயுதக் குழுக்களுக்கிடையே கடுமையான சண்டை நடைபெற்று வரும் நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.