Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மணலி தனியார் நிறுவனத்தில் இருந்து 29 டன் ஆயிலை கடத்தி விற்பனை: 3 பேர் சிக்கினர்

மணலி: மணலியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து 86 லட்ச ரூபாய் மதிப்புள்ள 29 டன் ஆயிலை கடத்தி விற்பனை செய்த டிரைவர் உள்பட 3 பேரை கைது செய்தனர். சென்னை மணலி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கெமிக்கல் கம்பெனியில் இருந்து கடந்த மாதம் 19ம்தேதி 29 டன் உயர்ரக கெமிக்கல் ஆயில் மகாராஷ்டிரா மாநிலம் அமர்நாத்தில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு டேங்கர் லாரியில் ஏற்றிச்செல்லப்பட்டது. பீகார் மாநிலத்தை சேர்ந்த தினேஷ்பஸ்வான்(67) ஓட்டிச்சென்றார். ஆனால் ஆயில் அந்த குறிப்பிட்ட நிறுவனத்துக்கு போய் சேரவில்லை என்று தெரிந்தது.

இதுகுறித்த புகாரின்படி, சாத்தாங்காடு போலீசார் விசாரணை நடத்தினர். இதில், டிரைவர் லாரியுடன் ஆயிலை கடத்தி எடுத்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு 86 லட்ச ரூபாய். இதையடுத்து லாரி டிரைவரை பிடிக்க குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்தநிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பதுங்கியிருந்த தினேஷ் பஸ்வானை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், கடத்தப்பட்ட ஆயிலை கள்ளக்குறிச்சி மாவட்டம் சேத்தமங்கலத்தை சேர்ந்த இளங்கோவன், குமார் ஆகியோர் மூலம் ஏழுமலை என்பவருக்கு விற்பனை செய்திருப்பது தெரிந்தது. ஆயிலை டேங்கர் லாரி மூலம் திருக்கோவிலூரில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் விற்றுள்ளார். இதையடுத்து தினேஷ் பஸ்வான், ஏழுமலை, இளங்கோவன் ஆகிய 3 பேரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர். இதுசம்பந்தமாக குமாரை தேடி வருகின்றனர்.