Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பொதுத்துறை நிறுவனத்தில் முதுநிலை பட்டதாரிகளுக்கு மேனேஜர் பணி

1. சீனியர் மேனேஜர் (துறைமுகங்கள் மற்றும் நீர்வழிகள்): 1 இடம் (பொது). வயது: 38க்குள். சம்பளம்: ரூ.60,000- ரூ.1,80,000. தகுதி: மரைன் இ்ன்ஜினியரிங் மற்றும் மேனேஜ்மென்ட், ஓஷன் ஸ்ட்ரக்சர்ஸ் இன்ஜினியரிங், ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங் பிரிவில் முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. மேனேஜர்:

i) துறைமுகங்கள் மற்றும் நீர்வழிகள்: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). வயது: 35க்குள். சம்பளம்: ரூ.50,000- 1,60,000. தகுதி: மரைன் இன்ஜினியரிங் மற்றும் மேனேஜ்மென்ட், ஓஷன் ஸ்ட்ரக்சர்/ஸ்டரக்சுரல் இன்ஜினியரிங் ஆகிய பிரிவுகளில் முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ii) கோஸ்டல் மாடலிங்: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). வயது: 35க்குள். சம்பளம்: ரூ.50,000- 1,60,000. தகுதி: கோஸ்டல் இன்ஜினியரிங், மரைன் இன்ஜினியரிங், ஓஷன் ஸ்ட்ரக்சர்ஸ் பிரிவில் முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. அசிஸ்டென்ட் மேனேஜர் (போர்ட் பிளானிங்): 1 இடம் (பொது). வயது: 32க்குள். சம்பளம்: ரூ.40,000- ரூ.1,40,000. தகுதி: டிரான்ஸ்போர்ட் இன்ஜினியரிங்/டிரான்ஸ்போர்ட் பிளானிங்/அர்பன் பிளானிங் பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: பொது/ஒபிசி யினருக்கு ரூ.600/-. பொருளாதார பிற்பட்டோர்/எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

www.rites.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.01.2026.