கொல்கத்தா: மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் தாய்வழி உறவினர் நிஹார் முகர்ஜி. இவர் ராம்பூர்ஹட் -1 தொகுதிக்கான திரிணாமுல் காங்கிரஸ் தலைவராக பணியாற்றியவர். இவரது மகள் பிரிஸ்டி முகர்ஜி(28). ராம்பூர்ஹட்டில் உள்ள குசும்பா கிராமத்தில் உள்ள அவரது வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள அறையில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த சில ஆண்டுகளாக மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு பிரிஸ்டி மருந்து உட்கொண்டு வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். முந்தைய திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின்போது அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைபெற்ற பணி நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாக கூறி அவற்றை நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அவர் குரூப் சி பணியை இழந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.



