Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாலியில் பிரிவினைவாதிகள் தாக்குதல்

பமாகோ: மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் வடக்கு பகுதியை பிரித்து தனி நாட்டை உருவாக்குவதற்கு பிரிவினைவாதிகள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்நிலையில் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள முக்கிய நகரான அனேபிஸ்சை கைப்பற்றுவதற்கான புதிய தாக்குதல் நடவடிக்கையை அசாவத் விடுதலை முன்னணி பிரிவினைவாதிகள் குழு தொடங்கி உள்ளது. இந்நிலையில் காவோ மற்றும் செவாரே உள்ளிட்ட பல வடக்கு நகரங்கள் பிரிவினைவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானதாக மாலி ராணுவம் தெரிவித்துள்ளது. உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.