Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

2 மலேசிய பயணிகளுக்கு கோவையில் அரிவாள் வெ*டு: துப்பாக்கி காட்டி மிரட்டல்

மதுக்கரை: கோவை மாவட்டம் கே.ஜி.சாவடி பகுதியில் நவக்கரை, கொச்சி - சேலம் பைபாஸ் சாலையில் பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பங்க்கில் நேற்று மாலை 5.30 மணியளவில், கேரளம் மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சென்னைக்கு வாடகை வேனில் மலேசியா சுற்றுலா பயணிகள் மற்றும் சிலர் எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேருக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அந்த நபர்கள், வேனுக்குள் புகுந்து அரிவாளால் வெட்டியதில் மலோசியா சுற்றுலா பயணிகள் லோகநாதன் (52), அவரது மகன் உகேந்திரன் (21) ஆகிய 2 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து புகார் கொடுத்தால் மலேசியாவுக்கு செல்வதற்கு தாமதம் ஏற்படும் என்பதால், அருகில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று பயணத்தை தொடர்ந்து உள்ளனர்.

இதையடுத்து சுற்றுலா பயணிகள் சென்ற வாகனம் மதுக்கரை மார்க்கெட் அருகே வந்துள்ளது. அப்போது, இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், சுற்றுலா வாகனத்தை தடுத்து நிறுத்தி, துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியில் இருந்த பொது மக்கள், இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை பிடிக்க முயன்ற போது அவர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிந்து நவக்கரை மற்றும் மதுக்கரை பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, தப்பிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.