ஜெயசூர்யா, முகேஷ் எம்எல்ஏ உள்பட 4 நடிகர்கள் மீது கொடுத்த பலாத்கார புகார் வாபஸ்: மலையாள நடிகை அறிவிப்பு
Advertisement
இதுகுறித்து அவர் கூறியதாவது: நடிகர்கள் மீது நான் கொடுத்த புகார் தொடர்பாக கேரள அரசு முறையாக விசாரணை நடத்தவில்லை. விசாரணைக்கு அரசு எந்த ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. என் மீது தொடரப்பட்ட போக்சோ வழக்கின் உண்மைத் தன்மையை அரசு நிரூபிக்க தவறிவிட்டது. இந்த சூழ்நிலையில் நான் நடிகர்கள் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற தீர்மானித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். ஆனால் கடிதம் கொடுத்தால் மட்டும் புகாரை வாபஸ் பெற முடியாது என்று சிறப்புப் பிரிவு போலீசார் தெரிவித்தனர். அரசுதான் வாதி. புகார்தாரர் முக்கிய சாட்சி ஆவார். மேலும் புகார்தாரர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். நீதிமன்றத்தில் ஆஜராகும் போது தான் வழக்கை வாபஸ் பெறுவது குறித்து நீதிமன்றத்தில் கூற முடியும். என்று போலீசார் தெரிவித்தனர்.
Advertisement