Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடர் கோப்பையை தட்டித்தூக்கிய லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ்

ஓக்லேண்ட்: அமெரிக்காவில் முதல் முறையாக நடந்த மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடரின் பைனலில், வாஷிங்டன் ஃபிரீடம் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.  ஓக்லேண்ட் கொலிசியம் மைதானத்தில் நடந்த விறுவிறுப்பான பைனலில் டாஸ் வென்ற வாஷிங்டன் ஃபிரீடம் அணி முதலில் பந்துவீச… லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் 19.4 ஓவரில் 164 ரன் குவித்து ஆல் அவுட்டானது.

பிளெட்சர் அதிகபட்சமாக 47 ரன் (27 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), கோலின் மன்ரோ 40 ரன் (29 பந்து, 4 சிக்சர்), ட்ரோம்ப் 39 ரன் (21 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர். சுனில் நரைன், ஆந்த்ரே ரஸ்ஸல் டக் அவுட்டாக, கேப்டன் ஹோல்டர் 8, ரோவ்மன் பாவெல் 4 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். அடுத்து களமிறங்கிய வாஷிங்டன் ஃபிரீடம் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ஓபஸ் பைனார் அதிகபட்சமாக 53 ரன் (24 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்), ஆண்ட்ரீஸ் கவுஸ் 40, நிகில் சவுதாரி 25 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். நைட் ரைடர்ஸ் பந்துவீச்சில் சுனில் நரைன் 4 ஓவரில் 13 ரன்னுக்கு 3 விக்கெட், ஹோல்டர் 4 ஓவரில் 31 ரன்னுக்கு 3 விக்கெட், ஷேட்லி வான் 2 விக்கெட் வீழ்த்தினர், நூலிழையில் த்ரில் வெற்றி பெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி முதலாவது மேஜர் லீக் (எம்எல்சி) டி20 தொடரில் சாம்பியனாகி அசத்தியது. சுனில் நரைன் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார்.