Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

நிதானத்தைக் கடைப்பிடியுங்கள: வெற்றியை வசப்படுத்துங்கள்!

இன்றைய சூழ்நிலையில் நிதானத்தை ஒரு கணம் கூட தவறவிடாதவர்கள் என்ற பெருமையைப் பெற்றவர்கள் உண்டா?என்று கேட்டால் இல்லை என்று தான் நிறைய பேர் கூறுவோம்.ஏனெனில் எப்படியாவது ஏதாவது ஒரு சூழ்நிலையிலாவது ஒவ்வொரு மனிதனும் கண்டிப்பாக நிதானத்தை தவற விட்டுவிடுவார்கள். காரணம் அவரால் திடீரென்று ஏற்படும் அதிகபட்ச இன்பத்தை அவரால் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்றால் கண்டிப் பாக அவர் ஒரு கணமாவது நிதானத்தை இழந்து விடுவார். ஆனால் இதற்கெல்லாம் விதிவிலக்காக தொடர்ந்து நிதானத்தைத் தனது வாழ்க்கையின் லட்சியமாக மனிதர்கள் ஒரு பிரிவினர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

மகிழ்ச்சி பெரிதாக இருந்தாலும் அவர்கள் அடுத்து ஒரு அடி எடுத்து வைக்கக்கூட முதலில் அவர்கள் தங்கள் மனநிலை நிதானத்தை ஏற்படுத்தி விட்டு தான் அவர்களின் செயல்பாட்டை ஆரம்பிக்கிறார்கள். எனவே நிதானத்துடன் மனிதர்கள் சிலர் இருக்கணுமே என்ற காரணத்தால் தான் அவர்களை கடவுளே படைத்திருக்கிறார் என்று நினைக்கின்றேன்.

இன்னும் சொல்லப்போனால் நம்மையே எடுத்துக்கொள்ளுங்கள். நாம் பல வண்ணங்களை உடைய பல பொருட்களை நாம் பார்க்கின்றோம். அவற்றின் அழகினை நாம் முழுமையாக அனுபவிக்கின்றோம். நமது கண்கள் பல்வேறு வண்ணங்கள், பருமன், எடை, நீளம், அகலம், உயரம் ஆகியவற்றின் ஒவ்வொரு பரிமாணத்தையும் நமது கண்கள் கொடுத்து அவற்றின் அழகின் ரகசியத்தை முழுமையாக அனுபவிக்க ஏற்ற வகையில் செய்கிறது.

ஆனால் அப்படி இருந்தாலும் நாம் நமது கண்களை பார்க்க வேண்டும் என்றால் அதாவது கண்கள் நம்மை பார்க்க வேண்டும் என்றால் கண்டிப்பாக ஒரு கண்ணாடியின் உதவியின்றி பார்க்க முடிவதில்லை. அத்தனை வண்ணங்களையும் நமக்கு ஒரு நொடிப் பொழுதில் தரம் பிரித்து உடனுக்குடன் பிரின்ட் போடக்கூடிய நமது கண்களே கருப்பு வெள்ளையாகத் தான் இருக்கிறது. இதுதான் கடவுள் கொடுத்த அதிசயம். எனவே கருப்பு வெள்ளை நிறமுடைய நமது கண்களை நாமே பார்க்க வேண்டும் என்றால் கண்ணாடி என்ற பொருளின் உதவி தேவைப்படுகின்றது.இதை பார்வையுள்ள மனிதர்களுக்கு எப்படி இயற்கை வழங்கியுள்ளதோ அதேபோல் பார்வையற்ற மனிதர்களுக்கு இயற்கைக் கண்ணாடி என்ற ஸ்தானத்தில் நிதானத்தை வைத்து படைத்துள்ளது.நான் எப்படி அத்தனை பெருமையுள்ள கண்களை நாம் கண்ணாடி உதவியின் மூலம் எப்படி பார்க்கின்றோமோ, அதைப்போல் பார்வையற்றோர்கள் நிதானத்தை தன் இயற்கை மூலம் பெறுகிறார்கள். அவர்கள் கண்டிப்பாக நிதானத்தை தவறவிட மாட்டார்கள். மேலும் பார்வையற்றோர்களை காட்டிலும் பார்வை உடைய நாம்தான் அதிகம் விபத்துக்குள்ளாகிறோம்.

நீங்கள் தொடர்ந்து நிதானத்தை கடைபிடியுங்கள் என்று நண்பருக்கு அறிவுரை வழங்கினார். நண்பரும் திருப்தியுடன் வீடு திரும்பினார். எனவே வாழ்வில் நிதானத்தை கடைபிடித்து தன்னம்பிக்கையுடன் செயல்பட்டவர்கள் தொடர்ந்து சாதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.இதற்கு சரியான உதாரணமாக இந்த சாதனைப் பெண்மணியை சொல்லலாம்.

ஜஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பது படித்த பலரின் கனவு. அந்தக் கனவு நனவாவது சிலருக்கு மட்டுமே.அதிலும் பார்வையற்ற ஒரு பெண் ஜஏஎஸ் அதிகாரியாகத் தேர்வாகி இருப்பது மிகப் பாராட்டுதலுக்கு உரியது தானே! நாட்டிலேயே பார்வையற்ற முதல் பெண் ஜஏஎஸ் அதிகாரி என்ற சிறப்பு இவருக்கு உண்டு. அவர்தான் பிராஞ்சல் பாடில்!

ஒரு முறையல்ல... இரு முறை தேர்வு எழுதி இரண்டிலுமே வென்றிருக்கார்.இந்த சாதனைச் சிங்கம்.01.04.1988 பிறந்த இவர், முதல் முறை யூனியன் பப்ளிக் சர்வீஸ் தேர்வுகளை 2016-ஆம் ஆண்டு எழுதி, 773-ஆவது ரேங்க் வாங்கியிருந்தார்.இரண்டாம் முறை அவர் தேர்வெழுதியபோது அவரது ரேங்க் நாட்டிலேயே 124 என முன்னேறினார்.பார்வையின்மை சாதனைக்கு தடையே இல்லை என உலகிற்கு சொல்லியிருக்கிறது இவரது வெற்றி!

தமது 31வது வயதில் 2019-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் சப் கலெக்டராக பணியாற்றினார். பின்னர் தெற்கு டெல்லி துணை நகராட்சி ஆணையராக பொறுப்பேற்று கல்வி பிரிவு இயக்குநர் என்ற கூடுதல் பதவியும் இவரைத் தேடி வந்தது.

என்னுடைய பிறந்த நாள் அன்று நாட்டின் தலைநகரத்தில் பொறுப்பேற்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி. இது நான் கனவிலும் எண்ணாத பாக்கியம். நான் வாழும் சமூகத்திற்கு என் பணிகள் மூலம் நல்ல முன்னேற்றத்தைத் தருவேன். மக்களுக்கு நன்மை செய்வதன் மூலமே அவர்களின் மனதில் ஒருவராக இடம்பிடிக்க முடியும்.நம்முடைய பணி மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் மக்கள் உத்வேகம் பெறுவார்கள். இளைஞர்கள் பலரும் என்னை முன்மாதிரியாகக் கொள்வார்கள் எனப் பதவியேற்கும்போது தெரிவித்தார் பிராஞ்சல் பாடில்.

தன்னுடைய லட்சியம் நிறைவேறுவதற்கு எல்லா விதத்திலும் உதவிகரமாக இருந்த தன்னுடைய பெற்றோர்களுக்கு நன்றியை நினைவுகூர்கிறார் இவர். என் மகளால் எனக்கு மிகவும் பெருமை ஏற்பட்டிருக்கிறது. பெண்களைப் பெற்றிருக்கும் அனைத்துப் பெற்றோர்களும் தங்களுடைய பெண் பிள்ளைகளுக்குக் கட்டாயம் கல்வி அளிக்க வேண்டும்.அவர்களின் கனவுகள் மெய்ப்பட முழுமையாக உதவ வேண்டும் என்கிறார் பிராஞ்சலின் தந்தை.

பிராஞ்சல் தன்னுடைய ஆரம்பக் கல்வியை தாதரில் இருக்கும் கமலா மேத்தா பார்வையற்ற பள்ளியில் தொடங்கினார்.அதன் பிறகு தாதரிலேயே இயங்கும் சரஸ்வதி வித்யாலயாவில் கல்வி பயின்றார்.அதன் பின்னர் மும்பை செயின் சேவியர் கல்லூரியிலும் பயின்றார்.இவர் பட்டம் பெற்றது அரசியல் அறிவியலில். பின்னர் முதுகலைப் பட்டமும் பெற்றார். சர்வதேச உறவுகள் தொடர்பாக டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று இருக்கின்றார்.

யுபிஎஸ்சி தேர்வுகளில் 2016 இல் முதன்முறையாக வென்ற போது இவருக்கு இந்திய ரயில்வே துறையின் கணக்குகள் பிரிவில் பணி ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஆனால் 100 % பார்வையற்றவராக இவர் இருந்ததால் ரயில்வே நிர்வாகம் பணியமர்த்த மறுத்து விட்டது.எனவே அதன் பின்னர் பரிதாபத்தில் இந்திய தபால் மற்றும் தொலைத்தொடர்பு கணக்குகள் மற்றும் நிதிப் பிரிவில் பணி ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

ரயில்வே நிர்வாகம் பணியளிக்க மறுத்ததால் பாடில் ஏமாற்றம் அடைந்தார். ஆனால் சோர்ந்து போய் விடவில்லை. மீண்டும் கடுமையாக முயன்றார். இந்த முறை பாடிலுக்கு கேரளா கேடர் ஐஏஎஸ் பதவி ஒதுக்கீடானது. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தின் உதவி ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார். அதன் பின்னர் திருவனந்தபுரம் துணை ஆட்சியாளராக நியமனம் செய்யப்பட்டார்.

பிராஞ்சல் நல்ல கவிஞரும்கூட, பெருந்திரளான பார்வையாளர்களுக்கு முன்னர் சிறப்பாகச் சொற்பொழிவு ஆற்றக்கூடியவர். தன் மீது பிறரின் அனுதாப பார்வைகள் விழுவதை ஒருபோதும் விரும்பாதவர்.

இவர் தனது பார்க்கும் திறனை 6 வது வயதில் முழுமையாக இழந்தார்.எந்த ஒரு பயிற்சி நிறுவனத்திற்கும் இவர் போகவில்லை.தேர்வு பயிற்சிகளை மேற்கொண்டார். இவருக்காக புத்தகங்களை வாசித்துக் காட்டக்கூடிய ஒரு மென்பொருள் உதவி மூலமே தேர்வுக்குத் தயாரானார். மாதிரி ஐஏஎஸ் கேள்வித்தாள்களுக்கு விடை அளிப்பது, குழுக் கலந்துரையாடல்களில் பங்கு பெறுவது என முழுமையாகத் தம்மைத் தயார் படுத்திக்கொண்டார்.

பிராஞ்சல் பாடில் விழித்திறன் இன்றி வழிகாட்டும் பெண்ணாகத் திகழ்கின்றார். தனது வாழ்க்கையில் நிதானத்தை கடை பிடித்து கடின உழைப்பும், விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு பிராஞ்சல் பாடிலின் வாழ்க்கை எல்லோருக்கும் ஒரு மிகச் சிறந்த உன்னதப் பாடமாகும்.