Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

மகிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் கார் 2027ல் அறிமுகம்!

மகிந்திரா நிறுவனம் அடுத்த எலெக்ட்ரிக் கார் 2027ம் ஆண்டில்தான் சந்தைப்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் பிஇ 07 என்ற எலெக்ட்ரிக் கான்செப்ட் காரை காட்சிப்படுத்தியிருந்தது. இந்தக் கார்தான் 2027ம் ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக நடப்பு ஆண்டு அக்டோபரில் இது வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கு முன்பு இந்த நிறுவனம் எக்ஸ்இவி 9இ, பிஇ6 மற்றும் எக்ஸ்இவி 9 எஸ் ஆகிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்துள்ளது. 2027ல் அறிமுகம் ஆவது இந்த நிறுவனத்தின் 4வது எலெக்ட்ரிக்கார்; பிஇ வரிசையில் 2வது கார். 4.6 மீட்டர், 5 சீட்டர் வேரியண்டாக இது இருக்கும் எனவும், இதில் உள்ள பேட்டரி 60 கிலோவாட் அவர் மற்றும் 80 கிலோவாட் அவர் ஆகியவற்றுக்கு இடைப்பட்டதாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல் உள்புறத்தில் 3 ஸ்கிரீன் டிஸ்பிளே இடம் பெறும் என கூறப்படுகிறது. தற்போது மாதத்துக்கு சராசரியாக 4,000 மகிந்திரா எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகின்றன. வரும் ஆண்டுகளில் இதனை 6,000 முதல் 7,000 வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.