Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மகிந்திரா பொலிரோ, நியோ போல்ட் எடிஷன்

மகிந்திரா நிறுவனம், பொலிரோ மற்றும் பொலிரோ நியோ போல்ட் ஸ்பெஷல் எடிஷன்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 7 சீட்கள் கொண்ட இந்த எஸ்யுவிக்களில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 76 எச்பி பவரை வெளிப்படுத்தும்.

இந்த இரண்டு கார்களிலும் ஹெட்லைட், கதவு பிடிகள், பணி விளக்குகள், வீல் ஆர்ச் போன்றவற்றில் டார்க் குரோம் பூச்சு இடம் பெற்றுள்ளது. இரண்டு எடிஷன்களிலுமே ஒரே பாதுகாப்பு கிட்தான் உள்ளது. போல்ட் எடிஷனில் கூடுதலாக ரியர் கேமரா இடம் பெற்றிருக்கும். இந்த ஸ்பெஷல் எடிஷன்களில் அழகியல் ரீதியான மாற்றங்கள்தான் அதிகம் இடம் பெற்றுள்ளன. பொலிரோ போல்ட் எடிஷனில் பி4, பி6 மற்றும் பி6 ஓபிடி என 3 வேரியண்ட்கள் உள்ளன.

துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.10.02 லட்சம். டாப் வேரியண்ட் சுமார் ரூ.11.14 லட்சம். நியோ போல்ட் எடிஷனில் என் 10 மற்றும் என் 10 (ஓ) என 2 வேரியண்ட்கள் உள்ளன. துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.11.9 லட்சம். டாப் வேரியண்ட் சுமார் ரூ.12.58 லட்சம். இந்த போல்ட் எடிஷன்களுக்கு டீலர்களிடமே வேரியண்ட்டுக்கு ஏற்ப ரூ.40,000 வரை செலுத்தி உதிரிபாக கிட் பெற்றுக் கொள்ளலாம்.