நெல்லை மாவட்டம், பணகுடி அருகே உள்ள மகேந்திரகிரி இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தில் உதவித் தொகையுடன் ஒரு வருட அப்ரன்டிஸ் பயிற்சி வழங்கப்பட உள்ளது,
பயிற்சி விவரம்:
1. கிராஜூவேட் அப்ரன்டிஸ் (இன்ஜினியரிங்): 41 இடங்கள். (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்-12, எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்-10, எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்-5, சிவில் இன்ஜினியரிங்-4, இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங்-3, கெமிக்கல் இன்ஜினியரிங்-2, கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்-5. உதவித் தொகை ரூ.9,000, வயது: 20.12.2025 தேதியின்படி 28க்குள். தகுதி: சம்பந்தப்பட்ட பொறியியல் பிரிவுகள் ஏதாவதொன்றில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. கலை, அறிவியல் பட்டதாரி அப்ரன்டிஸ் : 15 இடங்கள். பி.ஏ.,-4, பிஎஸ்சி-7, பி.காம்-4. உதவித்தொகை ரூ.8,000, வயது: 20.12.2025 தேதியின்படி 28க்குள். தகுதி: மேற்குறிப்பிட்ட ஏதாவது ஒரு பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
3. டெக்னிக்கல் அப்ரன்டிஸ்: 44 இடங்கள். (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்-15, எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்-10, எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்-10, சிவில் இன்ஜினியரிங்-5, கெமிக்கல் இன்ஜினியரிங்-4). உதவித் தொகை ரூ.8,000. வயது: 20.12.2025 தேதியின்படி 35க்குள். தகுதி: பயிற்சியளிக்கப்படும் பொறியியல் பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி/ஒபிசியினருக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு அளிக்கப்படும். 2021க்கு பின்னர் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே அப்ரன்டிஸ் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
விண்ணப்பதாரர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பத்தை www.iprc.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அசல் சான்றிதழ்களை இணைத்து நேர்முகத் தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும்.
பி.இ.,/பி.டெக்.,/டிப்ளமோ படித்தவர்களுக்கு நேர்முகத் தேர்வு: 10.01.2026.
இன்ஜினியரிங் அல்லாத பட்டதாரிகளுக்கு நேர்முகத் தேர்வு: 11.01.2026.
இடம்:
இஸ்ரோ
திரவ எரிபொருள் ஆராய்ச்சி மையம், மகேந்திரகிரி, பணகுடி, நெல்லை மாவட்டம்.

