தவெகவுக்கு தக்க பாடத்தை இடைத்தேர்தலில் மக்கள் கொடுக்க வேண்டும்: மதுராந்தகத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
செங்கல்பட்டு: "திமுக வேட்பாளர் பரந்தாமனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். மதுராந்தகத்தில் திமுகவின் வெற்றி போன முறை மிஸ் ஆயிருச்சு; இந்த முறை மிஸ் ஆகக்கூடாது. திமுக வேட்பாளரை சூட்கேஸ் காட்டி ரேட் பேச முடியாது; கேஸ் போட்டும் மிரட்ட முடியாது. மக்களை இளக்காரமாக நினைக்கும் தவெகவை மக்கள் அடக்க வேண்டும். தவெகவுக்கு தக்க பாடத்தை இடைத்தேர்தலில் மக்கள் கொடுக்க வேண்டும். தவெக வேட்பாளருக்கு எதிர்ப்பு, விரட்டி அடிப்பு என செய்திகள் வருகின்றன. தவெக வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து சுயமரியாதை உள்ள மக்கள் என்பதை காட்டிவிட்டீர்கள். " என மதுராந்தகத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

