Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் இன்று மாலை பிரசாரம்: பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்

சென்னை: மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் இன்று மாலை பிரசாரம் செய்கிறார். அங்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். மதுராந்தகம், தாராபுரம் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 6ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக, தவெக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இதனால் 5 முனை போட்டி நிலவி வருகிறது. ஒவ்வொரு கட்சி பிரமுகர்களும் தொகுதிகளில் முகாமிட்டு பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது. இதனால், தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் தாராபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் சுகன்​யாவை ஆதரித்​து திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டார். ேராடு ஷோ மேற்கொண்டு மக்களிடம் வாக்குகளை சேகரித்தார். தொடர்ந்து மாலையில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்றினார்.

இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் இ.பரந்தாமனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். அங்கு அவர் மக்களை சந்தித்து வாக்குகளை சேகரிக்கிறார். தொடர்ந்து மதுராந்தகம் புறவழிச்சாலை அருகே கலைஞர் திடலில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசுகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன், தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர், காஞ்சிபுரம் எம்பி செல்வம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ, மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ, தேமுதிக, எஸ்டிபிஐ கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், கருங்குழி, சோத்துப்பாக்கம், மேல்மருவத்தூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான திமுக தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர். மு.க.ஸ்டாலின் மதுராந்தகத்தில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதால் அந்த தொகுதி திமுக தொண்டர்களால் களைக்கட்டி காணப்படுகிறது.