சென்னை: சென்னை காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற சைவ சித்தாந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றபோது உளுந்தூர்பேட்டை பகுதியில் மற்றொரு கார் தன் கார் மீது மோதியதாக கூறி மதமோதலை தூண்டும் வகையில் பேசியிருந்தார். இதுதொடர்பாக சென்னை போலீசார், மதுரை ஆதீனம் ஞானசம்பந்தர் தேசிக பரமாச்சாரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் மதுரை ஆதீனத்திற்கு முன்ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், நேரில் சென்று அவரிடம் விசாரிக்கலாம் என்று கூறியிருந்தது.
இதையடுத்து கடந்த ஜூலை 20ம் தேதி மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள மதுரை ஆதீன மடத்தில் சென்னை சைபர் கிரைம் போலீசார், மதுரை ஆதீனத்திடம் ஒரு மணி நேரம் விசாரணையை நடத்தினர்.இந்நிலையில் 2வது முறையாக சென்னை சைபர் கிரைம் போலீசார், மதுரை சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் மதுரை ஆதீனத்திடம் நேற்று விசாரணை நடத்தினர். சுமார் 20 நிமிடம் ஆதீனத்திடம் விசாரணை நடத்திய போலீசார் பின்னர் கிளம்பி சென்றனர்.
