சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வலியுறுத்தி முதல்வர் விஜய், சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இதன்போது பேசிய முதல்வர் விஜய், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக வேண்டும் என்றார்.
மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு மற்றும் உத்தரவுகளை தமிழ் மொழியில் வழங்க வேண்டும் எனவும் தீர்மானத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தி உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இது பன்முகத்தன்மையை உறுதி செய்யும் விடுக்கப்படும் கோரிக்கையே தவிர, ஆங்கிலத்தை அகற்றும் கோரிக்கை அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை முதன்மையாக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள், ஆவணங்கள் மற்றும் வாதங்களுக்கு உரிய நடைமுறையை உருவாக்க வேண்டும்; உயர்நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புரைகள், தீர்ப்பாணைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தும் தமிழில் வழங்கும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்; மாண்புமிகு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்றப் பணியாளர்களுக்கான சட்டத் தமிழ் மற்றும் மொழிபெயர்ப்பு பயிற்சியை ஏற்படுத்த வேண்டும்.
அரசியலமைப்புச் சட்ட ARTICLE 348(2) மற்றும் ஆட்சி மொழிகள் ட்டம், 1963, பிரிவு 7 ஆகியவற்றின் கீழ் மாநில ஆளுநர் அவர்களால் அனுப்பப்படும் முன்மொழிவுகளின் மீது தேவையான அனைத்து சட்ட வடிக்கைகளையும் உடனடியாக ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் தனித்தீர்மானம் மூலம் முதல்வர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.



