Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மாதவரம் மண்டலம் 27வது வார்டில் திமுக ஆட்சியில் திறக்கப்பட்ட ஜிம், சிறுவர் பூங்காவுக்கு பூட்டு: பொருட்கள் வீணாவதால் வேதனை

மாதவரம்: சென்னை மாதவரம் மண்டலம் 27வது வார்டு அண்ணா தெருவில் சென்னை மாநகராட்சி இடத்தில் கடந்த திமுக ஆட்சியின்போது 1.42 கோடி ரூபாய் செலவில் உடற்பயிற்சி கூடம், பல்நோக்கு மையம் மற்றும் சிறுவர் பூங்கா கட்டப்பட்டது. இதை அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் முன்னாள் எம்எல்ஏ மாதவரம் சுதர்சனம், அவற்றை மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

புதிதாக கட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி உபகரணங்கள், பல்நோக்கு மையத்தில் ரேஷன் கடை அமைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உடற்பயிற்சி மையத்திற்கு தேவையான உபகரணங்கள் வாங்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. வளாகத்தின் நுழைவு கேட் இழுத்து பூட்டப்பட்டுள்ளது. இதனால் பூங்காவில் உள்ள செடி, கொடிகள் மற்றும் சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் பழுதாகி வருகிறது. பல்நோக்கு மையம், உடற்பயிற்சி கூடம் பயன்படுத்தப்படாமலேயே பாழாகி வருகிறது.

எனவே மக்கள் வரிப்பணத்தை வீணாக்காமல் உடற்பயிற்சி கூடத்திற்கு தேவையான உபகரணங்களை பொருத்தி, பல்நோக்கு மையம், சிறுவர் பூங்காவை பயன்பாட்டிற்கு திறந்து விடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.