புதுடெல்லி: பட்டாசு தொடர்பான வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்,‘‘பேரியம் வேதிப்பொருள் குறைக்கப்பட்ட பட்டாசுகளை டெல்லி, சென்னை, போபால் மற்றும் கொல்கத்தாவில் வெடித்து சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 125 டெசிபல் ஒலி அளவுக்கு குறைவான நவீன தலைமுறைப் பட்டாசுகளை அனுமதிக்கலாம். இதற்கு நீரி அமைப்பும் பரிந்துரை செய்துள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து அதனை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
+
Advertisement




