Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குறைந்த பந்துகளில் இருநுாறு ஷமியின் சாதனை வரலாறு

துபாய்: வங்கதேசத்துக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி ஒரு நாள் போட்டியில் ஆடிய இந்திய வீரர் முகம்மது ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவர் மொத்தத்தில் 5,126 பந்துகள் வீசி 200வது விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த பந்துகளில் 200 விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற மகத்தான சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன், ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் ஸ்டார்க் 5,240 பந்துகளில் 200 விக்கெட் வீழ்த்தியதே உலக சாதனையாக இருந்து வந்தது.

நிலை வீரர் பந்துகள்

1 முகம்மது ஷமி 5,126

2 மிட்செல் ஸ்டார்க் 5,240

3 சக்லைன் முஷ்டாக் 5451

4 பிரெட்லீ 5640

5 டிரென்ட் போல்ட் 5783

* ஐசிசி ஓடிஐக்களில் ஷமிக்கு 60 விக்கெட்

முகம்மது ஷமி, ஐசிசி ஒரு நாள் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் நிகழ்த்தி உள்ளார். இந்த பட்டியலில் ஷமி 60 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஜாகீர் கான், 59, ஜவகல் ஸ்ரீநாத் 47, ரவீந்திர ஜடேஜா 43 விக்கெட்டுகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

* 51 இன்னிங்ஸ்களில் 8 சதம் போட்டு கில் சாதனை

வங்கதேசத்துடனான ஐசிசி ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் சுப்மன் கில் 101 ரன் குவித்தார். இது அவருக்கு 8வது சதம். 51 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை எட்டியுள்ள அவர், குறைந்த இன்னிங்ஸ்களில் 8 சதம் விளாசிய முதல் இந்திய வீரராக சாதனை படைத்துள்ளார். அவருக்கு அடுத்து 2வது இடத்தில் ஷிகர் தவான் 57 இன்னிஸ்களுடனும், விராட் கோஹ்லி 68, கவுதம் கம்பீர் 98, சச்சின் டெண்டுல்கர் 111 இன்னிங்ஸ்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

* கேட்ச் பிடிப்பதில் கில்லி கோஹ்லி

ஒரு நாள் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர்களில் விராட் கோஹ்லி 156 கேட்ச்களுடன் முதலிடத்தில் உள்ளார். அந்த இடத்தை முன்னாள் இந்திய கேப்டன் முகம்மது அசாருதீனுடன் அவர் பகிர்ந்து கொள்கிறார். இவர்களுக்கு அடுத்த இடங்களில் சச்சின் டெண்டுல்கர் 140, ராகுல் டிராவிட் 124, சுரேஷ் ரெய்னா 102 கேட்ச்களுடன் உள்ளனர்.