Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பெண்ணை 7 துண்டாக வெட்டி வீசிய காதல் ஜோடி, நண்பருடன் கைது: விசாரணையில் பரபரப்பு தகவல்

சேலம்: சேலத்தில் பெண்ணை கொன்று 7 துண்டுகளாக வெட்டி குடிநீர் தொட்டிகளில் வீசிய வழக்கில் காதல்ஜோடி, நண்பரை போலீசார் கைது செய்தனர். சேலம் அரிசிபாளையத்தை சேர்ந்த கோயில் பூசாரி ரமேஷ் (62) வீட்டு குடிநீர் தொட்டிகளில் 7 துண்டுகளாக வெட்டப்பட்டு 3 மூட்டைகளில் கட்டி ஒரு பெண்ணின் சடலம் வீசப்பட்டு கிடந்தது நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் சேலம் அயோத்தியாப்பட்டணம் மேட்டுப்பட்டி தாதனூரை சேர்ந்த ஜீவானந்தம் என்பவரது மனைவி தங்கமணி (50) என தெரிய வந்தது.

அவருடன் செல்போனில் சம்பவம் நடந்த 28ம் தேதி பேசிய நபர்களில் சந்தேக நபர்களை பட்டியல் எடுத்து தனிப்படை போலீசார் விசாரித்தனர். அதில், தங்கமணியின் சொந்த ஊரான மேட்டுப்பட்டி தாதனூர் அருகே சுக்கம்பட்டியை சேர்ந்த நந்தினி (27) என்பவர் சிக்கினார். அவரை பிடித்து விசாரித்தபோது, சம்பவத்தன்று தனது காதலனான சேலம் அழகாபுரம் பெரியபுதூரை சேர்ந்த மாலிக்பாட்சா (27) என்பவருடன் சேர்ந்து தங்கமணியை அரிசிபாளையத்தில் உள்ள சித்தி வீட்டிற்கு அழைத்துச் சென்று கொலை செய்ததும், பிறகு நண்பரான சிவராமன் (24) என்பவரை வரவழைத்து, உடலை துண்டு துண்டாக வெட்டி மூட்டைகளில் கட்டி தண்ணீர் தொட்டிகளில் வீசியதும் தெரியவந்தது.

இதையடுத்து காதல்ஜோடியான நந்தினி, மாலிக்பாட்சா, நண்பர் சிவராமன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அளித்த தகவல் குறித்து போலீசார் கூறியதாவது: தங்கமணி தினமும் சேலத்திற்கு வீட்டு வேலைக்கு பஸ்சில் வரும்போது நந்தினி பழக்கமாகி உள்ளார். தங்கமணி அணிந்து வந்துள்ள தங்க நகைகளை பார்த்து ஆசைகொண்ட நந்தினி, அதனை பறிக்க காதலன் மாலிக்பாட்சாவுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார்.  அதன்படியே 28ம் தேதி தங்கமணியை ஒரு வீட்டுக்கு வேலை செய்ய அழைத்தார்கள் என்று கூறி அரிசிபாளையத்துக்கு நந்தினி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றதும், காதலன் மாலிக்பாட்சாவை அழைத்துள்ளார்.

அவர் வந்ததும் இருவரும் சேர்ந்து, தங்கமணியை அடித்துக் கொலை செய்து, 4 பவுன் நகையை எடுத்துக் கொண்டுள்ளனர். பின்னர், சிவராமனை வரவழைத்து கோழி வெட்டும் கத்தியால் தங்கமணியின் உடலை தலை, கை, கால் என 7 துண்டுகளாக வெட்டி, 3 சாக்குமூட்டைகளில் கட்டி, பின்புறமுள்ள கோயில் பூசாரி ரமேஷ் வீட்டின் 2 தண்ணீர் தொட்டிகளிலும், கொலை செய்த வீட்டின் மாடியில் உள்ள ஒரு தண்ணீர் தொட்டிக்கு அடியிலும் போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். தற்போது, மூவரும் சிக்கிக்கொண்டனர். இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.