திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தின்போது சேவைகள், சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் வருகிற செப்டம்பர் 15 முதல் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதனை ஒட்டி பிரமோற்சவம் நடைபெறும் இந்த 9 நாட்களுக்கு அஷ்டதல பாத பத்மாராதனை சேவை, திருப்பாவாடா சேவை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவை போன்ற சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. மேலும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், 1 வயது குழந்தையுடன் பெற்றோர்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கான தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.


