*சப்பாத்தி மாவு பிசையும் போது மக்காச்சோள மாவு சேர்த்து பிசைந்தால், சப்பாத்தி சாஃப்டாக வரும்.
*கோதுமை மாவை கரைத்து அதில் ஒரு டம்ளர் மோர் ஊற்றி கரைத்து, உடனே தோசை வார்த்தால், தோசை சூப்பர்.
*பருப்புகள், பீன்ஸ் வேகவைக்கும்போது முதலிலேயே உப்பு சேர்க்கக் கூடாது. ஆரம்பத்திலேயே உப்பு சேர்த்தால், வேக நிறைய நேரம் எடுக்கும்.
*வீட்டில் உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வதாக இருந்தால், உருளைக்கிழங்கை சீவி, அதை கடலை மாவு கலந்த தண்ணீரில் நனைத்து உலர வைத்த பின் பொரித்தால் நன்றாக இருக்கும்.
*பலகாரங்களுக்கு பாகு காய்ச்சும்போது பதம் வந்ததும் சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்த்தால் பாகு முறியாது.
*பக்கோடா செய்யும்போது, கடலை மாவுக்கு பதிலாக பொட்டுக் கடலை மாவு பயன்படுத்தினால் சுவை கூடுவதோடு, வயிற்றுக் கோளாறுகள் வராது.
* எந்த வகை சட்னி செய்தாலும், சிறிதளவு பூண்டு சேர்த்தால், மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
*பால் பாயசம் செய்யும் போது பாதாம் பருப்பை அரைத்து அதில் சேர்த்தால் பாயசம் சுவையாக இருக்கும்.
- விஜயலட்சுமி


