*முத்துகளையும் தங்கத்தையும் சேர்த்து வைக்காமல் தனித்தனியே வைத்தால் பளபளப்பு
குறையாமல் இருக்கும்.
*சமையலறையின் தரை அழுக்காக இருந்தால் எலுமிச்சை, உப்பு கொண்டு அவ்வப்போது துடைக்க கிருமிகள் அண்டாது.
*பட்டுப்புடவைகளை சுடுநீரில் அலசாதீர்கள்.
*சாம்பாரில் போடும் சின்ன வெங்காயம் ஒவ்வொன்றையும் நன்றாக மைய நசுக்கி, அறையின் நான்கு பக்கமும் போடுங்கள். வெங்காய வாசனைக்கு பல்லி, பூச்சிகள் வராது.
*பூஜையறையில் பீங்கான் விளக்கை தவிர்ப்பது நல்லது. மேலும் அது
பாதுகாப்பும் கூட.
*வீட்டில் ஈ தொல்லை இருக்கும் இடத்தில் சிறிதளவு புதினா இலையைத் தண்ணீரில் கரைத்து தெளியுங்கள். புதினாவுக்கும் , ஈக்களுக்கும் ஆகவே ஆகாது.
*வெள்ளிப் பொருட்களை பட்டுத்துணியில் சுற்றி மர அலமாரிகளில் வைத்தால் கருத்து போகாது.
*கடலை மாவை நெய்விட்டு லேசாக வறுத்தப் பிறகு மைசூர் பாகு செய்தால் மணம் தூக்கலாக இருக்கும். சோடா தூவிக் கிளறிக் கொட்டினால் மைசூர் பாகு மிகவும் சுவையாக இருக்கும்.
*அதிரசம் நைசாக வர ஒரு கிலோ அரிசிக்கு ஒரு கரண்டி உளுத்தம் பருப்பை வறுத்துச் சேர்த்து அரைத்தால் தொட்டாலே மென்மையாக
பஞ்சுப் போல் வரும்.
*காய்கறி மற்றும் கீரை வகைகளை வதக்குவதை விட கூட்டாக சமைத்தால் அதிலுள்ள வைட்டமின் சத்துக்கள் வீணாகாது.
- எல். நஞ்சன்.


