* ஒரு கப் மாவிற்கு ஒரு ஸ்பூன் வீதம் ரவை கலந்து பிசைந்து பூரி சுட்டால் பூரி நன்கு உப்பி வரும்.
* மீன் சமைக்கும் போது எலுமிச்சபழச்சாறு சிறிது விட்டால் ருசியாக இருப்பதுடன் மீனும் கறுக்காது.
* மோர்க்குழம்பு செய்து இறக்குவதற்கு முன் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் விட்டால் அதன் ருசியே தனி.
* பால் இளஞ்சூடாக இருக்கும்போது உறை ஊற்றினால்தான் நன்றாக உறையும்.
* ஒரு அச்சு வெல்லத் துண்டை நெய்ஜாடியில் போட்டு வைத்தால் மணமும் ருசியும் அப்படியே இருக்கும்.
* வினிகரில் உப்பைக் கலந்து அதில் மாமிசத்தை போட்டு வைத்தால் இரண்டு நாட்கள் வரை கெடாது.
* பச்சை மிளகாய் காம்பை கிள்ளிவைத்து விட்டால் நீண்ட நாட்கள் வாடாமல் இருக்கும்.
* பாலை நல்ல சுத்தமான மண் பாண்டங்களில் வைத்தால் இரண்டு நாட்கள் ஆனாலும் கெடாது.
* இஞ்சியை இருண்ட இடத்தில் வைத்தால் ஒரு வாரம் வரை வாடாமல் இருக்கும்.
* கத்திரிக்காயை எப்போதும் காகிதப் பையில் போட்டுத்தான் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும்.
* வெங்காயம் வெட்டும் முன் தண்ணீரில் போட்டு வைத்து வெட்டினால் கண்கள் எரியாது.
* பிளாஸ்க்கை பயன் படுத்தாமல் வைத்துள்ளபோது அதில் கொஞ்சம் நாட்டுச்சர்க்கரையை போட்டு வைத்தால் துர்நாற்றம் வராது.
* அதிரசம் செய்யும் போது மாவுடன் சிறிது பேரீச்சம்பழத்தையும் சேர்த்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
- எஸ். விமலா சடையப்பன்.
