Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

குட்டிக் குட்டி வீட்டுக் குறிப்புகள்!

* டைனிங் டேபிளில் ஈக்கள் மொய்த்தால் தண்ணீரில் உப்பு கரைத்து தெளித்தால் ஈக்கள் வராது.

* கீரை பயத்தம் பருப்பு கூட்டு செய்யும்போது ஒரு கப் பால் விட்டால் சுவையும், மணமும் தூக்கலாக இருக்கும்.

* குழந்தைகளின் ஸ்வெட்டர்களை சுடு நீரில் போட்டு அலசினால் நன்றாக இருக்கும்.மேலும் இவைகளை கோடை காலத்தில் துவைத்து அலசிப் போடுவது நல்லது.

* வெள்ளைத் துணியில் டீ கொட்டி விட்டால் உடனே அதன் மேல் சீனியை தூவினால் கறை போய் விடும்.

* அரிசி சாக்குடன் இருப்பதால் அதிக நாள் கெடாமல், புழு, வண்டு பிடிக்காமல் இருக்கும்.

* ரவா இட்லி செய்யும் போது சிறிது சேமியாவை வறுத்து ரவையுடன் தயிரில் ஊறவைத்து செய்தால் சுவையாக இருக்கும்.

* முந்திரிப்பருப்பு வைக்கும் டப்பாவில் கொஞ்சம் கிராம்பு போட்டு வைத்தால் எறும்புகள் வராது.

* ஊறுகாயை மர அகப்பையில் வைத்துதான் எடுக்க வேண்டும். கையில் தொடக் கூடாது.

* தீர்ந்து போன செண்ட் பாட்டில்களை பீரோவில் போட்டு வைத்தால் வாசனை வீசும்.

* தேங்காய் மூடியை தண்ணீரில் போட்டு வைத்தால் சில நாட்கள் கெடாது.

* வெல்லம் சேர்த்து செய்யும் எந்தப் பொருளுக்கும் நெய் பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும்.

* பிரியாணி செய்யும் போது ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டால் பொல பொலவென இருக்கும்.

* வாழை இலை வாடாமல் இருக்க அதை கோணியிலோ, பிளாஸ்டிக் பேப்பரிலோ சுற்றி வைக்க வேண்டும்.

* உலர்ந்த ஆரஞ்சுத் தோலை புகை மூட்டினால் கொசு வராது.

- விமலா சடையப்பன்.