*பாலை நல்ல சுத்தமான மண்பாண்டக்களில் வைத்தால் இரண்டு நாட்கள் ஆனாலும் கெடாது.
*குளிர்ந்த நீரில் ஒரு ஜாடியை நிரப்பி அதில் எலுமிச்சம் பழங்களை போட்டு வைத்தால் எத்தனை நாள் ஆனாலும் கெடாது.
*வெப்பமான இடங்களில் வசிப்பவர்கள் மாமிசத்தின் மேல் சிறிய கரியை பொடி செய்து தூவிவிட்டால் மாமிசம் கெடாது.
*வினிகரில் உப்பைக் கலந்து அதில் மாமிசத்தை போட்டு வைத்தால் இரண்டு நாட்கள் வரை கெடாது.
*மீனின் மேல் உப்பு மற்றும் மஞ்சள் தூளை கலந்து தூவி பின்னர் குளிர் சாதனப் பெட்டியில் வைத்தால் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
*முட்டையின் மேல் நெய் அல்லது வெண்ணெய் தடவி வைத்தால் முட்டை கெடாது.
*பச்சைமிளகாய் காம்பை கிள்ளி வைத்தால் நீண்ட நாட்கள் வாடாமல் இருக்கும்.
*இஞ்சியை ஒரு இரண்ட, குளிர்ந்த இடத்தில் வைத்தால் ஒரு வாரம்வரை பசுமையாக இருக்கும்.
*பால் காய்ச்சும் பாத்திரத்தின் விளிம்பில் சிறிது கிளிசரினை தடவி விட்டால் பால் பொங்கி வழியாது.
*கீரையை எப்போதும் இரும்பு வாணலியில் சமைக்கக் கூடாது.
*கத்திரிக்காயை எப்போதும் காகிதப்பையில் தான் போட்டு ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும்.
*முந்திரிப்பருப்பு பாட்டிலில் சில கிராம்புகளை போட்டு வைத்தால் புழு, பூச்சிகள் வராது.
*வெயில் காலங்களில் முட்டையை தண்ணீரில் போட்டு வைத்தால் பத்து நாட்கள் வரை கெடாது.
- விமலா சடையப்பன்.
