Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நான் பேசுவதை கேளுங்கள், என்னை பேச அனுமதியுங்கள் என எதிர்க்கட்சிகளுக்கு, பிரதமர் மோடி கோரிக்கை!!

டெல்லி: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர். நான் பேசுவதை கேளுங்கள், என்னை பேச அனுமதியுங்கள் என எதிர்க்கட்சிகளுக்கு, பிரதமர் மோடி கோரிக்கை வைத்தார். பிரதமர் மோடியின் உரையை புறக்கணித்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். வருங்காலத்தை கருத்தில் கொண்டே வர்த்தக ஒப்பந்தங்களில் புரட்சி செய்து வருகிறோம். வர்த்தக ஒப்பந்தம் இளைஞர்களுக்கு பயனளிக்கும்; இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தத்தை உலக நாடுகள் பாராட்டுகின்றன என கூறினார்.