Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

தமிழகத்தில் வெற்றி பெற்ற 234 எம்எல்ஏக்கள் பட்டியல் கவர்னரிடம் ஒப்படைப்பு: தலைமை தேர்தல் அதிகாரி வழங்கினார்

சென்னை: தமிழகத்தில் வெற்றி பெற்ற 234 எம்எம்ஏக்களின் பட்டியலை கவர்னரிடம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வழங்கினார். தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களிலும், திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றன. தவெக வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்காக தவெக சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், தமிழக கவர்னர் அர்லேகரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 234 எம்எல்ஏக்களின் பட்டியலை கவர்னரிடம் அவர் வழங்கினார்.