Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

லிப்பி!

லிப்பி (Libby) … உலகம் முழுவதும் உள்ள நூலக வாசகர்களுக்காக உருவாக்கப்பட்ட இலவச மின்புத்தக மற்றும் ஆடியோபுத்தக செயலி. இதன் சிறப்பம்சம், பயனர்கள் தங்கள் நகரம் அல்லது நாட்டில் உள்ள பொது நூலகத்தின் உறுப்பினராக இருந்தால், அந்த நூலகத்தின் மின்புத்தக சேமிப்பிலிருந்து புத்தகங்களை இலவசமாக கண்டெடுத்துப் படிக்க முடியும். நூலகத்தின் அட்டை எண்ணை பயன்படுத்தி அதன்பின் விருப்பமான புத்தகங்களை தேடி படிக்கலாம்.

லிப்பி செயலியின் வடிவமைப்பு எளிமையாகவும், கண்கவர் தோற்றத்துடன் இருப்பதால் புத்தக வாசிப்பு மீதான ஆர்வம் மேலும் அதிகரிக்கும். இதன் “read offline” வசதி மூலமாக இணைய இணைப்பு இல்லாத நேரத்திலும் புத்தகங்களைப் படிக்க முடியும். வாசிக்கும் பொழுது எழுத்துரு அளவு, பின்னணி நிறம், எழுத்து வடிவம் போன்றவற்றை தங்களுக்குப் பிடித்தபடி மாற்றிக் கொள்ளலாம். இரவுநேர வாசிப்புக்கு ஏற்ற “dark mode” எனும் அம்சமும் உள்ளது.

ஆடியோபுத்தகங்களை கேட்க விரும்பு வோருக்கு, லிப்பி ஒரு சிறந்த தேர்வு. இதில் உள்ள ஆடியோ கட்டுப்பாட்டு வசதிகள் மூலம் வேகம், சுருதி போன்றவற்றை மாற்றி விருப்பப்படி கேட்கலாம். மேலும் லிப்பி மூலம் வாசித்த புத்தகங்களைப் பதிவு செய்யவும், புத்தகக் குறிப்புகளை எழுதவும், முந்தைய வாசிப்புகளை மீண்டும் அணுகவும் முடியும். புதிய புத்தக பரிந்துரைகள், பிரபலமான ஆசிரியர் களின் படைப்புகள், வகைப்பிரிப்பு மூலம் தேடுதல் போன்ற அம்சங்கள் வாசகர்களுக்கு புத்தக உலகை இன்னும் எளிதாக அணுகச்செய்கின்றன. Android, iOS, மற்றும் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது லிப்பி.