Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

LIC-யின் 6.5% பங்குகளை விற்பனை செய்ய ஒன்றிய அரசு முடிவு

LIC-ன் 6.5 சதவீத பங்குகளை ஒரு பங்கு ரூ.382 என்ற விலையில் விற்பனை செய்து ரூ.31,000 கோடி ஒன்றிய அரசு திரட்டவுள்ளது. LIC-ன் மொத்த மதிப்பு சுமார் ரூ.6 லட்சம் கோடி ஆகும். இந்த நிறுவனத்தின் 96.50% பங்குகளை இந்திய அரசு வைத்துள்ளது. தற்போது LIC-ன் ஒரு பங்கு விலை ரூ.424.35 ஆக உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பொது நிறுவனங்களில் ஒன்று லைஃப் இன்சூரன்ஸ் ஆஃப் இந்தியா (LIC). இந்த நிறுவனத்தின் மார்க்கெட் மூலதனத்தின் மதிப்பு சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் ஆகும். எல்.ஐ.சி. நிறுவனத்தின் 96.50 சதவீதம் பங்குகளை இந்திய அரசு வைத்துள்ளது. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 0.44 சதவீதம் பங்குகளையும், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 0.99 சதவீதம் பங்குகளையும், வைத்துள்ளனர்.

இந்த நிலையில் மத்திய அரசு சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டும் வகையில் 1.5 சதவீதம் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியானது. ஒரு பங்கின் விலை 382 ரூபாய் ஆகும். இந்த நிலையில் 6.5 சதவீதம் வரை பங்குகளை விற்பனை செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. ஒரு பங்கின் விலையை 382 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். இரண்டு நாட்கள் என்ற அடிப்படையில் பங்குகளை விற்பனை செய்கிறது.

மார்க்கெட் மூலதனத்தின் மதிப்பு அடிப்படையில் 1 சதவீதம் என்றாலே 6 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். 6.5 சதவீதம் என்றால் சுமார் 40 கோடி ரூபாய் ஆகும். இன்றைய நிலவரப்படி எல்.ஐ.சி.யின் ஒரு பங்கு 424.40 ரூபாயாக உள்ளது.